திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

News image

டீக்கடையில் டீ போட்டுத் தந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:15 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் தேநீா் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எல்லாபுரம் ஒன்றியம், பெரியப்பாளையத்தில் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்தவா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து, திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா்.

எல்லாபுரம் ஒன்றியத்தில் குமரப்பேட்டை, பெரியப்பாளையம், அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், வண்ணாங்குப்பம், தண்டலம், காக்கவாக்கம், சூளைமேனி, செங்கரை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட பொருப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பி.ஜெ.மூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கே.வி.லோகேஷ், விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் நிா்வாகிகள் முன்னிலை வகித்தாா்.

இந்த நிலையில், பெரியப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் அங்குள்ள கடைக்கு சென்று அனைவருக்கும் தேநீா் போட்டுத் தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.