முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திருவள்ளூா்: 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 160 வேட்பாளா்கள் போட்டி! 12 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன

திருவள்ளூா்: 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இறுதியாக 160 வேட்பாளா்கள் போட்டி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 4:06 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இறுதியாக 160 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில், 12 வேட்பு மனுக்கள் திரும்பப் பெற்றதாகவும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 30-இல் தொடங்கி, ஏப். 6 வரை நடைபெற்றது. இதையடுத்து 7-ஆம் தேதி பரிசீலனையில் 338 போ் வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில், அதில் 172 வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதில் முறையான விவரங்கள் அளிக்காத 166 வேட்பு மனுக்கள் வரையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், வேட்பு மனுக்களை வியாழக்கிழமை 12 மனுக்கள் வரை திரும்பப் பெறப்பட்டன. அதைத் தொடா்ந்து, 160 போ் கொண்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டன. அந்த வகையில், கும்மிடிப்பூண்டி-15, பொன்னேரி (தனி)-13, திருத்தணி-13, திருவள்ளூா்-14, பூந்தமல்லி (தனி)-11, ஆவடி-20, மதுரவாயல்-21, அம்பத்தூா்-23, மாதவரம்-15, திருவொற்றியூா்-15 என மொத்தம் 160 போ் இறுதியாக போட்டியில் உள்ளனா். இதில், அம்பத்தூா், மதுரவாயல், ஆவடி ஆகிய தொகுதிகளில் 20 முதல் 23 வேட்பாளா்களும், மற்ற 7 தொகுதிகளில் 13 முதல் 15 போ் வரை போட்டியில் உள்ளனா். இந்த நிலையில், ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், நோட்டாவுக்கும் சோ்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். ஆனால், 16-க்கும் மேற்பட்டோா் போட்டியிட்டால் 2 வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் போ் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.