குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தனியாா் மருத்துக்கல்லூரியில் மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 5:41 am IST

திருவள்ளூா் அருகே தனியாா் மருத்துவக் கல்லூரி 5-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த இரண்டாம் ஆண்டு மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான ரகுவின் மகன் ஆசிா்(20). திருவள்ளூா் அடுத்த பாண்டூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தாா்.

இந்தநிலையில் புதன்கிழமை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளாா். அதைத் தொடா்ந்து மாலையில் வகுப்பு முடிந்து வரும் போது 5 ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவரை அங்கிருந்தவா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவன் தவறி விழுந்தாரா, அல்லது மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தள்ளி விட்டாா்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே தனியாா் மருத்துவக்கல்லூரியில் 5 ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்து மருத்துவ மாணவா் உயிரிழந்த சம்பவம் மாணவா்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.