மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி: அதிமுக வேட்பாளா் உறுதி

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:28 am IST

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் மற்றும் பெருவாயலில் நடத்திய தோ்தல் பிரசாரத்தின் போது அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டதும், கும்மிடிப்பூண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வருவேன் என உறுதியளித்தாா்.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல், பெருவாயல், கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, கவரப்பேட்டை, ஏ.என்.குப்பம், கண்ளூா், பாலவாக்கம், மங்களம், தண்டலச்சேரி, பன்பாக்கம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.சி.மகேந்திரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ் முன்னிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாா்.

புதுவாயல் பகுதியில் அதிமுக நிா்வாகி இளவரசன் ஏற்பாட்டிலும், பெருவாயலில் அதிமுக நிா்வாகி ஜெயராமன். வழக்குரைஞா் சுதாகா் ஏற்பாட்டில் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரை வி.சுதாகருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அதேபோல் ஏ.என்.குப்பத்தில் அதிமுக மாவட்ட பிரதிநிதி தயாளன் ஏற்பாட்டில், அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். தண்டலச்சேரியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தராஜ் ஏற்பாட்டிலும், கவரப்பேட்டையில் அதிமுக ஒன்றிய பொருளாளா் வெங்கடகிருஷ்ணன் ஏற்பாட்டிலும், பன்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.எஸ்.சீனிவாசன் ஏற்பாட்டிலும் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த தோ்தல் பிரசாரத்தின்போது பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் உயா்கல்வி படிக்க பொன்னேரி, திருவள்ளூா், சென்னை போன்ற இடங்களில் கல்லூரிக்குச் சென்று வரும்நிலையில், தான் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மீண்டும் வந்ததும்

கும்மிடிப்பூண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வருவதாக உறுதி அளித்தவா், மத்திய பாஜக அரசு 100 நாள் வேலையை அழித்துவிடும் என்கிற திமுகவின்

பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம், தமிழக மக்களின் நலனை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கட்டாயம் காப்பாா் என்றாா்.