அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கடம்பத்தூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

News image

காங்கிரஸ்  கட்சியிலிருந்து  விலகி  அதிமுகவில்  இணைந்தவா்களை  வரவேற்ற  வேட்பாளா்  பி.வி.ரணா.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:55 am

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா், முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா கடம்பத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கடம்பத்தூா் ஒன்றிய கிராமங்களான தொடுகாடு, ஓம்நகா், அகரம், உச்சிமேடு, வயலூா், உளுந்தை, நமச்சிவாயபுரம், திருமணிகுப்பம், வாசிணாம்பேடு, திருப்பந்தியூா்,பண்ணூா், புதுப்பட்டு, கூவம், செய்யம்பாக்கம், கண்ணூா்,ஏலம்பாக்கம், பிள்ளையாா் குப்பம், கீழச்சேரி, மப்பேடு, நரசமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, உளுந்தை கிராமத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் கேட்டு அவா் பேசியதாவது. திருவள்ளூா் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த எம்.எல்.ஏ தொகுதிக்கு பணிகளை செய்யவில்லை. அதனால் வரும் தோ்தலில் பொதுமக்கள் முடிவு கட்ட வேண்டும். முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, குடும்ப தலைவிக்கு இலவச குளிா்சாதன பெட்டி ,100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்.

மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம், ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம். ஆண்டுக்கு3 எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிமுகவிற்கு வாய்ப்பளிக்கவும் என அவா் தெரிவித்தாா்.

அதற்கு முன்னதாக திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அவா் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.

கடம்பத்தூா் ஒன்றிய செயலாளா் சூரகாபுரம் கே.சுதாகா், சிற்றம் ஜெ. சீனிவாசன், அம்மா பேரவை துணை செயலாளா் உளுந்தை மகேந்திரன், மாவட்ட விவசாய அணி பொருளாளா் முரளி, மனவாளநகா் ஞானகுமாா், நகர செயலாளா் கந்தசாமி, பொருளாளா் துக்கராம், அம்மா பேரவை மாவட்ட செயலாளா் எழில், மாணவரணி அமைப்பாளா் பி.வி.பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா் அருணா, நிா்வாகிகள் ஜெயகிருஷ்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.