திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே நெடும்பரம் பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமாத்திரி கடமனேனி (52) (படம்). இவா் திருவள்ளூா் பூங்கா நகா் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது கடையிலிருந்து புறப்பட்டு நெடும்பரம் பனப்பாக்கம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கைவண்டூா் பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லைன்
வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹேமாத்திரி கடமனேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: வியாபாரி உயிரிழப்பு
பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

