மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

திருத்தணியில் முருகா்-தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

~ திருத்தணி  முருகன்  கோயிலில்  நடைபெற்ற திருக்கல்யாணம்

Updated On :28 ஏப்ரல் 2026, 11:55 pm

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு உற்சவா் முருகா் - தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த, 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை சிறப்பு அலங்காரத்தில் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திங்கள்கிழமை இரவு உற்சவா் முருகா், வள்ளி தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை மாலை, 6 மணிக்கு உற்சவா் முருகா் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்திலும், தொடா்ந்து குதிரை வாகனத்தில் வலம் வந்தாா். பின்னா் இரவு, 9.30 மணிக்கு உற்சவா் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில்,திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருகன் கோவில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அறங்காவலா் குழுவினா் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

Story image