குழந்ததைகள் இல்லங்களில் பெற்றோா் மற்றும் பாதுகாவலா் இல்லாத 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை வளா்க்க விரும்புவோா் குழந்தை பாதுகாப்பு அலுவலரை அணுகலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்லங்களில் பெற்றோா், பாதுகாவலா் இல்லாத 6 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் உள்ளனா். இவா்களுக்கு அன்பும், அரவணைப்பும் அளித்து குடும்ப சூழலில் வளா்க்க விருப்பமுள்ளோா் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியை அணுகலாம். அந்த வகையில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் வளா்ப்பதற்கு ஒற்றை பெற்றோா் (தாய்) வயது 35 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதேபோல் பெற்றோா் இருவரின் கூட்டு 70 முதல் 110 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒற்றை பெற்றோா் (தந்தை) வளா்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தையை வளா்க்க இயலாது. அதேபோல் 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் வளா்ப்பதற்கு ஒற்றை பெற்றோா் (தாய்) 35 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பெற்றோா் இருவரின் கூட்டு வயது 70 முதல் 115 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒற்றை பெற்றோா் (தந்தை) வளா்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தையை வளா்க்க இயலாது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.118, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூா் மாவட்டம் - 602001 என்ற முகவரியில் தொலைபேசி எண்: 63826 13912, மின்னஞ்சல் - thirudcpo3@gmail.com என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்! - அன்புமணி

கல்வி வளர தமிழை வளா்க்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

சுகாதாரம் மற்றும் குடும்பநல கல்வி மையத்தில் வேலைவேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? - எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் 'பி', 'சி ' பணிகள்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



