/

விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? - எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் 'பி', 'சி ' பணிகள்!

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2668 குரூப் 'பி', 'சி ' பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

எய்ம்ஸ் - கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 11:19 pm IST

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனைகளில் 2668 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இது குறித்த விவரம் வருமாறு :

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 93/2026

மொத்த காலியிடங்கள்: 2668

பணி : Assistant Administrative Officer,Junior Admin.Officer

வயது வரம்பு : 21 முதல் 31-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Junior Admin Officer பணிக்கு ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Assistnat Admin. Officer பணிக்கு எம்பிஏ, மேலாண்மை பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: OT Technician,Technical Assistant(Anaesthesia)

தகுதி : அறிவில் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு OT Assistant பயிற்சி பெற்றிருக்க வேண்டும். Technical Assistant பணிக்கு B.Sc. Anesthesia Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dietician,Assistant Dietician

தகுதி: Food Science & Nutrician, Home Science, Food and Nutrition பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dresser

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி சிகிச்சை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 31-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer,Assistant Engineer

பிரிவு: Civil,Electrical,Airconditioning, Mechanical

தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ECG Technician

தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இசிஜி டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Steno(Junior Scale - Hindi)

தகுதி : +2 தேர்ச்சியுடன் இந்தியில் சுருக்கெழுத்து எழுதி தட்டச்சு செய்யும் திறன் பெற்றி ருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff, Junior Warden,Hospital Attendant

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்டப் பணியில் மருத்துவமனை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Technologist,Lab Attendant

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி எம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (ENT)

தகுதி : Speech and Hearing பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Audiometer Technician

தகுதி: Audiology பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dental Technician

தகுதி:+2 தேர்ச்சியுடன் Dental Technology பாடத்தில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator

தகுதி : +2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk, Senior Admin.Assistant

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் நடத்தும் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் எய்ம்ஸ், ஜிப்மர், ரிம்ஸ் போன்ற மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு 3000. எஸ்சி, எஸ்சி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.2400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 25 முதல் 27 வரை நடைபெறும். தேர்வு நடைபெறும் சரியான தேதி, இடம் குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், பணி வாரியாக காலியிடப் பகிர்வு போன்ற கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.7.2026

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

For posts in group where skill test is required the recruitment will be completed in two stages where Stage I will be written test (CBT or any other mode) on scheme of examination as applicable for the applicable group..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.