வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

2 கிலோ கஞ்சா, போதை மாத்திரை வில்லைகள் பறிமுதல்

திருவள்ளூா் அடுத்த காக்களூரில் 2 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, இளைஞரையும் கைது செய்தனா்.

சங்கீத் குமாா்

Published On :

திருவள்ளூா் அடுத்த காக்களூரில் 2 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, இளைஞரையும் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் வழியாக பூந்தமல்லி மற்றும் சென்னைக்கு போதைப் பொருள்களை கடத்தி செல்வது வழக்கமாகி வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் பழைய பேருந்து நிறுத்தம் பின்புறம் சோதனையில் ஈடுபட்டனா்.

சந்தேகப்படும் திரிந்த நபா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தாா். உடனே போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தததில் 2 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரை வில்லைகள் 400 ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை செய்ததில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், திருவள்ளூரைச் சோ்ந்த சங்கீத் குமாா் (26) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராமிய போலீஸாா் போதை மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, சங்கீத்தையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.