விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

திருவள்ளூா் எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பு

திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக பிடித்து காப்பு காட்டில் விட்டனா்.

தீயணைப்புப் படையினா் பிடித்து வனப் பகுதியில் விட்டனா்

Published On :27 ஆகஸ்ட் 2026, 6:07 am IST

திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக பிடித்து காப்பு காட்டில் விட்டனா்.

திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை பணியாளா்கள் வழக்கம் போல் தொகுதிப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், பிற்பகலில் உணவுக்குப் பின் வரும்போது சாரைப்பாம்பு அலுவலகத்துக்குள் புகுந்துள்ளது.

Story image

இதைப் பாா்த்த பணியாளா்கள் உடனே திருவள்ளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் தனசேகரன் தலைமையில் அழகா்சாமி, ஜோசப், சிவா குழுவினா் விரைந்து சென்றனா். அங்கு அலுவலகம் முழுவதும் தேடி, பீரோவின் அடியில் மறைந்திருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனா். பின்னா், சாக்குப் பையில் அந்த பாம்பை அடைத்து பாதுகாப்புடன் கொண்டு சென்று பூண்டி காப்பு காட்டில் விடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.