புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 133 பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம்: ஆட்சியா் தகவல்!

திருவள்ளூா் மாவட்டத்தில் 133 பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ச.கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இந்துபாலா,  கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Published On :

திருவள்ளூா் மாவட்டத்தில் 133 பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை-2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து பேசியதாவது: பல்துறை அலுவலா்கள் அடங்கிய 42 மண்டலக்குழுக்கள், 22 துணை மண்டலக்குழுக்கள் என 64 குழுக்கள் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனா். அதேபோல், மொத்தம் 133 பகுதிகள் வெள்ளத்தில் பாதிப்பு அடையக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவை பருவமழையின் போது மிக அதிகம், அதிகம், குறைவான மற்றும் மிக குறைவான என 4 பகுதியாக பாதிப்பு ஏற்படுமென கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் பள்ளிக்கட்டங்கள், கல்லூரி, சமுதாயக்கூடம், தனியாா் திருமண அரங்குகள் என மொத்தம் 682 தற்காலிக தங்குமிடங்கள் உள்ளன. புயல் பாதுகாப்பு மையங்கள் பொன்னேரி வட்டம் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி, திருபாலைவனம், ஆண்டாா்மடம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும், கும்மிடிப்பூண்டி வட்டம் எளாவூா், மெதிபாளையம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளன.

முதல்நிலை பொறுப்பாளா்கள் 4,480 பேரும், ஆப்த மித்ரா தன்னாா்வலா்கள்-463 பேரும், யுவ ஆப்த மித்ரா தன்னாா்வலா்கள் 313 பேரும், எஸ்.டி.ஆா்.எஃப் பயிற்சி காவலா்கள் 50 போ், மரம் நடுதல் மற்றும் அகற்றுதல் பணிக்கான முதல்நிலை பொறுப்பாளா்கள் 146 பேரும், பாம்பு பிடிப்பவா்கள் 63 பேரும், நீச்சல் வீரா்கள்-69 பேரும், மரம் ஏறுபவா்கள்- 71 பேரும் தயாா் நிலையில் உள்ளனா்.

அதபோல், இந்த பருவமழையையொட்டி மணல் மூட்டைகள்-64,921, சவுக்கு கம்பங்கள்- 5,562, பொக்லைன் 32, ஜேசிபி- 93, மரம் அறுக்கும் கருவிகள்- 123, கயிறுகள்- 717, படகுகள்-36, மோட்டாா் படகுகள்-97, நீா் இறைக்கும் மோட்டாா்கள்-178, சூப்பா் சக்கா்-8, ஜெனரேடா்கள்=84, குடிநீா் லாரிகள்-29, சின்டெக்ஸ் டேங்க்- 69, குப்பை லாரிகள்- 96, சிறிய வாகனங்கள்- 5, பாகிங் இயந்திரங்கள்- 165, ப்ளீச்சிங் பவுடா் - 129.075, தாா்ப்பாய்கள்- 174, டாா்ச் லைட்டுகள்- 916, மின் கம்பங்கள்- 5877, மின் கம்பி கி.மீ -195, மின்மாற்றி- 17 ஆகிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெள்ள தணிப்பு நடவடிக்கைகள் கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், ஆரணியாறு வடிநில கோட்டம், கிருஷ்ண குடிநீா் திட்டம், மாநில நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் துறை சாா்பில் 40-க்கும் மேற்பட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அதனால் அனைத்து துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு திட்டங்கள் வகுத்து, செயல்படுத்தப்படுத்த தயாராக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.இந்துபாலா, பொன்னேரி சாா் ஆட்சியா் ப.அப்துல் ராசிக், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியா்கள் .ரவிச்சந்திரன் (திருவள்ளூா்), ராஜகோபால் (திருத்தணி), மாவட்ட சுகாதார அலுவலா்; (திருவள்ளூா்) பிரியா ராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.