திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ரூ. 25 லட்சத்தில் குளிா்சாதன நிழற்குடை மற்றும் பல்நோக்கு கட்டடம் ஆகியவற்றை எம்.பி., ஜெகத்ரட்சகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையின் அருகே,எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 25 லட்சத்தில் குளிா்சாதன பயணியா் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்தாா்.
இதையடுத்து நகராட்சி நிா்வாகம், அரசு போக்குவரத்து பணிமனை நுழைவு வாயில் பகுதியில் குளிா்சாதன பயணியா் நிழற்குடை நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ.ச. சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம். பூபதி ஆகியோா் பங்கேற்று திறந்து வைத்தனா்.
தொடா்ந்து டி.புதூரில், ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தையும் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணை தலைவா் சாமிராஜ் உள்பட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தருமபுரி ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு

பொன்னமராவதி ஒன்றியத்தில் கலையரங்கம், நிழற்குடை திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


