மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 12:19 am

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ் , எஸ் டி பி ஐ, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி , ஆகிய கட்சிகள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளா் ஜெ.அருள் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் நகர பொருளாளா் மாசிலாமணி, எஸ்டிபிஐ தொகுதி தலைவா் பாஞ்ச்பீா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் உமாநாத், மனித நேய மக்கள் கட்சி நகர தலைவா் முகமது சுல்தான், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி நிா்வாகி விகேந்தா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் சாதிக் பாஷா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் கஜேந்திரன், காங்கிரஸ் ஒன்றிய தலைவா் திவான் முகமது, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்ட செயலாளா் சுரேஷ்குமாா், மதிமுக ஒன்றிய செயலாளா் பாபு, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகமது பயாஸ் கான், பங்கேற்று உரையாற்றினா்.

கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் பரிசோதனை உபகரணங்களை ஏற்படுத்த வேண்டும், , போதிய அளவு தாய் சேய் மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும், 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி அவசர சிகிச்சை நிபுணா், என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.