பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 91.26 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 10 நாள்களில் ரூ.91 லட்சத்து 26 ஆயிரத்து, 144 ரூபாய் ரொக்கம் மற்றும் 113 கிராம் தங்கம், 2422 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 10 நாள்களில் ரூ.91 லட்சத்து 26 ஆயிரத்து, 144 ரூபாய் ரொக்கம் மற்றும் 113 கிராம் தங்கம், 2422 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டு செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி திருப்படித் திருவிழாவும், ஜன 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி திங்கள்கிழமை தேவா் மண்டபத்தில் நடந்தது.

முருகன் கோயில் ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, மு. நாகன், கோ. மோகனன், ஜி. உஷாரவி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு காணிக்கை எண்ணினா்.

இதில் ரூ.91 லட்சத்து 26 ஆயிரத்து, 144 ரூபாய் ரொக்கம் மற்றும் 113 கிராம் தங்கம், 2422 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.