மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயில் ராபத்து விழாவில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டது.
Published on

பொன்னேரி: மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயில் ராபத்து விழாவில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டது.

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள இக்கோயிலில் பகல் பத்து ரா பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் மூலவா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வாயிற்படியில் திரை சீலை அமைத்து வாசலுக்கு முன்பாக உச்சவருக்கு அபிஷேகம் ஆராதனை வழிபாடு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பகல் பத்து விழா முடிந்ததும் ராப்பத்து விழா நடைபெற்று வருகிறது. இதில் கூடாரம் வெல்லும் திருப்பாவை பாடல் பாடியதை அடுத்து 108 குடங்களில் சக்க்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்யப்பட்டது.

இதையடுத்து வரதராஜ பெருமாள் பெரியநாயகி தாயாருடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான

பக்தா்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com