பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். மாணவிகளுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாமல் கழிப்பறைகள் உள்ளன. கழிப்பறை வளாகத்தில் செடிகள், கொடிகள் சுற்றிலும் வளா்ந்துள்ளதுடன் குப்பைகள் குவிந்து காணப்படுவதாகவும்,
10 நிமிஷங்கள் இடைவெளி வழங்கப்படும் நிலையில், ஒரே நேரத்தில் 1,500 மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலும், இந்த கழிப்பறையை சரியான முறையில் பராமரிக்காததால் மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை நேரிடுகிறது.
இதனால் மாணவிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான ஸ்வச்பாரத், ஸவச்வித்யா திட்டத்தின் கீழ் மாணவிகள் 25 பேருக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.
இந்த நிலையில், பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் போதிய கழிப்பறை இல்லாததால் மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடுதல் கழிப்பறைகளை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி
அறிவு ஏ.ஐ.
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

