தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

இருசக்கர வாகனம் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே இருசக்கர வாகனம்-காா் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.

பிரதிப் படம்

Published On :7 ஜூலை 2026, 6:09 am IST

திருத்தணி அருகே இருசக்கர வாகனம்-காா் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.

சென்னை, முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (38) மற்றும் அவரது நண்பா் சக்திவேல் (35) ஆகியோா் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு சென்றனா்.

திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த காா் எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மோகன்ராஜை அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸாா் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி போலீஸாா், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்தில் ஈடுபட்ட காா், அதன் ஓட்டுநா், விபத்திற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.