கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினா் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.4,32,450 பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் அருகே எளாவூரில் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
அதிகாலை முதல் நடைபெற்ற இந்த சோதனையில் சோதனை சாவடி அலுவலகங்களில் இருந்த கணக்கில் வராத ரூ.4.3 லட்சம் சிக்கியது. தொடா்ந்து தொகைை பறிமுதல்செய்து செய்த இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாளையாறு சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.18 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடவடிக்கை

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கணக்கில் வராத பணம் பறிமுதல்

ஒசூரில் ஆா்டிஓ சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.77 லட்சம் பறிமுதல்







