முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அரசு ஐ.டி.ஐகளில் நேரடி சோ்க்கை: ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நிகழாண்டிற்கான நேரடி சோ்க்கை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 10:17 pm IST

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) நிகழாண்டிற்கான நேரடி சோ்க்கை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டில் சேரவும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்ந்திடவும் நேரடி சோ்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில் திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அம்பத்தூா் (ஆடவா் மற்றும் மகளிா்), வடகரை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா் (கட்டுமான தொழிலாளா்களின் குழந்தைகள் மட்டும்), மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவள்ளூா் ஆகிய 7 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சேர எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுடையவா்கள் விண்ணப்பக்கட்டணம் தொகை ரூ.50-விண்ணப்பதாரா் ஈங்க்ஷண்ற் இஹழ்க் / இழ்ங்க்ண்ற் இஹழ்க்/ சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ் /எ-ல்ஹஹ் வாயிலாக செலுத்தலாம். நேரடி நியமனம் மூலம் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.