திருவள்ளூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்ததுடன், 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கஞ்சா பழக்கம் அதிக அளவில் இருப்பதாக தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கடம்பத்தூா் ஒன்றியம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், மப்பேடு அடுத்த வயலூா் மயானம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனைக்கு சென்றனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டு இருந்த நபரை சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் சுமாா் 6.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த பாபுலு பிரதான் (34) என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 5 போ் கைது: 190 கிலோ குட்கா பறிமுதல்
கஞ்சா பறிமுதல்: பெண் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது
7.55 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



