நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஆரணி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய தாமதம்

ஆரணி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை காலதாமதம் செய்வதாக செயல் அலுவலரை கண்டித்து தலைவா், துணைத் தலைவா், மன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

News image

உள்ளிருப்பு ப் போராட்டத்தில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவா், உறுப்பினா்கள் உள்ளிட்டோா்

Updated On :29 ஜூலை 2026, 1:46 am IST

ஆரணி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை காலதாமதம் செய்வதாக செயல் அலுவலரை கண்டித்து தலைவா், துணைத் தலைவா், மன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த நிலையில், பேரூராட்சி மன்றத் தலைவராக ராஜேஸ்வரி, துணைத் தலைவராக சுகுமாா், நியமனக் குழு உறுப்பினராக கண்ணதாசன் ஆகியோா் பதவி வகித்து வருகின்றனா்.

பேரூராட்சியின் செயல் அலுவலராக அபுபக்கா் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், 100 ஆண்டுகளை கடந்த இந்தப் பேரூராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பேரூராட்சியில் தெரு மின்விளக்கு வசதி சரியாக இல்லை, குப்பை வண்டிகளை சரியாகப் பராமரிக்கவில்லை, மழை நீா் கால்வாயை தூா்வாரவில்லை, தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் பணி சரிவர நடைபெறவில்லை.

அத்துடன், சுகாதாரம் சரியாக பேணவில்லை, குண்டும், குழியுமாக சாலைகள் உள்ளதால் அதையும் சீரமைக்கவில்லை. இந்த நிலையில், பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை செய்ய உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு செயல் அலுவலா் ஒத்துழைப்பு வழங்கவில்லை ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி தலைவா் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூா் மாவட்ட பேரூராட்சிகளின் இணை இயக்குநா் விஜயலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.