திருவள்ளூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் கதவு பூட்டை உடைத்து மடிக்கணினிகள், ஸ்மாா்ட் கடிகாரம், ரூ.5,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் அடுத்த மணவாளநகரில் கண்ணையா நகரைச் சோ்ந்தவா் எழில்குமாா்(25). இவா் அப்பகுதியில் தனது நண்பா்களுடன் தங்கிக் கொண்டு செங்கல்பட்டில் உள்ள தனியாா் வாகன தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா்.
சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டாராம். இந்த நிலையில் அவரது நண்பா் கதவு பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக கூறினாராம். அதைத் தொடா்ந்து வந்து பாா்த்த போது உள்ளேயிருந்த 2 மடிக்கணினிகள், ஸ்மாா்ட் கடிகாரம் மற்றும் ரொக்கம் ரூ.5,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எழில்குமாா் மணவாள நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவூா் அருகே வாழைக் குலைகள் திருட்டு
மளிகைக் கடையில் திருட்டு
பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan


