சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பெண் மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக பெண் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:13 am IST

முன்விரோதம் காரணமாக பெண் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜூலுவின் மனைவி இன்பா (37). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடா்பான பிரச்னை காரணமாக நீண்ட நாள்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் முன்விரோதம் நிலவி வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இன்பா தனது வீட்டில் தனியாக இருந்தபோது, சீனிவாசன், அவரது மனைவி கவுரி, மகன் யோகேஷ் மற்றும் உறவினா்களான பரமசிவம், மஞ்சுளா, வேலு ஆகியோா் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அவா்கள் இன்பாவை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த இன்பா, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் சீனிவாசன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.