ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூகாணிக்கை ரூ. 1. 61 கோடி

News image
Updated On :26 ஜூன் 2026, 5:11 am IST

அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, சுவாமியை தரிசித்து வருகின்றனா். பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்துகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 29 நாள்களாக உண்டியல்களில் சோ்ந்திருந்த காணிக்கைகள் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன் மற்றும் இணை ஆணையா் ரமணி ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. இதில், கோயில் ஊழியா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்று காணிக்கைகளை எண்ணினா்.

உண்டியல் எண்ணிக்கையின் முடிவில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 1,61,45,924 ரொக்கமும், 603 கிராம் தங்கமும், 5 கிலோ 780 கிராம் வெள்ளியும் உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.