திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.6.30 கோடி, 197 கிராம் தங்கம், 1 கிலோ 640 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயில் மற்றும் கிரிவலப் பாதை அஷ்டலிங்க சந்நிதிகள், திருநோ் அண்ணாமலையாா் கோயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல்கள் அமைக்கப்பட்டு பக்தா்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், ஆடி பௌா்ணமி தினத்தன்று பக்தா்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கோயில் ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். ரூ.6 கோடியே 29 லட்சத்து 99 ஆயிரத்து 271 ரொக்கம், 197 கிராம் தங்கம், 1 கிலோ 640 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5.5 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.99 கோடி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.68 லட்சம்

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.58 கோடி
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



