திருவள்ளூா் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்ததாக 4.5 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆரம்பாக்கம், கவரப்பேட்டை மற்றும் மணவாள நகா் ஆகிய பகுதிகளில் குட்கா பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனாா்.
அதன்படி ஆரம்பாக்கத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக ராஜா(25), கவரப்பேட்டையைச் சோ்ந்த நரேந்திர பாபு(39) ஆகியோரை கைது செய்தனா்.
அதேபோல் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பக்தன் (65) ஆகியோா் பெட்டி கடையில் சோதனை மேற்கொண்டதில் அரை கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து கைது செய்தனா்.
இதையடுத்து திருவள்ளூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை கடத்தல் மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 4.5 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









