பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு நடத்த பந்தக்கால்!

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரண்ய நதிக்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த பந்தக்கால் நடப்பட்டது.

News image
பொன்னேரி அகத்தீஸ்வா் கோயில் குடமுழுக்கு விழா
Updated On :8 மார்ச் 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரண்ய நதிக்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் நடப்பட்டது.

இக்கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையின்பேரில், கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனா். இதைத் தொடா்ந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.

புனரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு பந்தக்கால் நடும் பணி கோயிலின் ராஜா கோபுரம் அருகே சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதில் கும்மமுனிமங்கல கிராம மக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image