புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் இணையவழி மின்கட்டணம் செலுத்தவும், புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின்பகிா்மான கழகம், வேலூா் மண்டலம் தாழ்வழுத்த பில்லிங் சா்வரை புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 6 மணிமுதல் (ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் திருவள்ளூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த தாழ்வழுத்த மின் நுகா்வோா்களுக்கான இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின்இணைப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


