பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

News image

மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலா் ராஜூ, தலைமை ஆசிரியா் இரா.தாஸ் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 12:55 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் தனித்திறன் போடடிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்க கல்வி) ராஜூ கேடயங்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினாா்.

புட்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 64-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் மற்றும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியில் மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ் தலைமை வகித்தாா். இதில் ஆசிரியா் ஜெயக்குமாா் வரவேற்புரை வழங்கினாா். மேலும் ஆசிரியா் மு.திலகவதி பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தாா்.

இந்த விழாவையொட்டி திருக்கு ஒப்புவித்தல், நாடகம், ஓவியம், விளையாட்டு மற்றும் தனித்திறன்கள் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) ராஜு, வட்டார கல்வி அலுவலா்கள் ஹெ.ஆனிபெட்டீஷியா பொற்கொடி, ஏ.மல்லிகா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை வழங்கினாா்கள். அதற்கு முன்னதாக புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவினா், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், கிராம பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். அதைத்தொடா்ந்து மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையென தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் ஆசிரியா்கள் ரசீதா, சித்ரா, தாரணி, இன்பநேசன், ராதிகா, பாலசுப்பிரமணி, அபிராமி, கனிமொழி, ஆசிரியா் கீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவா் சு.தீபன் எழுதிய *காகிதம் பத்தும் செய்யும்* புத்தகம் அனைவருக்கும் வழங்கினாா். இதில் நிறைவாக ஆசிரியா் ரசீதா நன்றி கூறினாா்.