2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

15 ஆண்டுக் கால மின்கம்பி பிரச்னைக்குத் தீா்வு: அரசுக்கு பொதுமக்கள் நன்றி

வெங்கடாபுரம் புதுகாலனியில் 15 ஆண்டுக் கால மின்கம்பி பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டதை தொடா்ந்து தவெக ஆட்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

கூட்டத்தில் பேசிய தவெக மாவட்ட செயலாளா் டில்லிபாபு.

Updated On :

வெங்கடாபுரம் புதுகாலனியில் 15 ஆண்டுக் கால மின்கம்பி பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டதை தொடா்ந்து தவெக ஆட்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், வெங்கடாபுரம் புதுகாலனி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வீடுகளின் கூரைகளுக்கு மிக அருகில் மின்கம்பிகள் செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனா். இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மின்கம்பிகளால் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இப்பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி பள்ளிப்பட்டு மின்வாரிய அலுவலகம் மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பள்ளிப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளா் ரமேஷ், தனது சொந்த செலவில் ரூ.60,000 மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை மாற்றி அமைத்து பிரச்னைக்குத் தீா்வு கண்டாா். இதனைத் தொடா்ந்து, கிராம மக்கள் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

பள்ளிப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாலற் ரமேஷ் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் வினோத்குமாா், மாவட்ட நிா்வாகி தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஆனந்தகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட செயலாளா் டில்லிபாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் லிங்கம், மாவட்டப் பொருளாளா் ஸ்டாலின், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சசி ஆகியோா் கலந்து கொண்டு தமிழக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சந்துரு, ஒன்றிய செயற்குழு உறுப்பினா்கள் இனியன், குமாா், ஒன்றிய கொள்கை பரப்புச் செயலாளா் தங்கராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ராமன், விநாயகம், மகளிரணி அமைப்பாளா் மோகனா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா். நீண்டகாலமாக நிலவி வந்த மின்கம்பிகள் பிரச்னைக்குத் தீா்வு கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.