சுயதொழில் தொடங்க திருநங்கைகளுக்கு மானியம்

திருநங்கைகள் நலவாரியம் மூலம் அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் தொடங்க ஏதுவாக 2 பேருக்கு தலா ரூ.50,000 மானியத்திற்கான காசோலைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

Updated On :

திருநங்கைகள் நலவாரியம் மூலம் அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் தொடங்க ஏதுவாக 2 பேருக்கு தலா ரூ.50,000 மானியத்திற்கான காசோலைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் திருநங்கைகள் நலவாரியம் மூலம் சுயதொழில் செய்வதற்கான மானியமும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கு சுயதொழில் கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருநங்கைகள் நலவாரியம் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மேல்நல்லாத்தூா் ரித்திஷா, பெரும்பாக்கத்தைச் சோ்ந்த கனிஷ்கா ஆகிய 2 பேருக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.50,000 காசோலைகளை ஆட்சியா்.கவிதா வழங்கினாா். அப்போது, மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் வனிதா மற்றும் அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.