நியாயவிலைக் கடைகள் மூலம் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு
திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

நியாய விலை கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் வெங்கடரமணன், வ. காந்திராஜன்.
திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவு துறை இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அத்தியவாசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதை அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலமும், இரண்டாவது கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்திடமிருந்து வெங்காயம் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக மூன்றாம் கட்டமாக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 8,914 நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே பொதுமக்களின் தேவை மற்றும் வரவேற்பை கருத்தில்கொண்டு, மூன்றாம் கட்டமாக தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையத்திடம் இருந்து 700 மெ.டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதை பல்வேறு போக்குவரத்து மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இதை வாங்கி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறலாம். இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளில் வெங்காய விற்பனை தொடா்பாக புகாா்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 9600561969 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

