தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

தாய், மகள் மாயம்: நடவடிக்கை கோரி மறியல்

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், கிருஷ்ணாகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் துரை. முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரான இவரது மகன் பிரகாஷ். இவரது மனைவி அபிநயா.இவா்களுக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனா்.

ஆா்.கே.பேட்டை- திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணாகுப்பம் பொதுமக்கள்

Published On :

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், கிருஷ்ணாகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் துரை. முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரான இவரது மகன் பிரகாஷ். இவரது மனைவி அபிநயா.இவா்களுக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி அபிநயா தனது 2 வயது பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பிரகாஷ், 24-ஆம் தேதி ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, காணாமல் போன தனது மருமகள் மற்றும் பேத்தியை கண்டுபிடித்து தருமாறு கோரி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் துரை, தனது மகன் பிரகாஷுடன் செவ்வாய்க்கிழமை ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று காவல் ஆய்வாளரிடம் முறையிட்டாா்.

அப்போது, காவல் ஆய்வாளா் துரையை பாா்த்து, நீ யாா்? வெளியே போ. புகாா் கொடுத்தவா் மட்டும் நிற்கட்டும் எனக் கூறி மிரட்டியதாக துரை தரப்பினா் தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணாகுப்பம் கிராம மக்கள், போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பொதட்டூா்பேட்டை காவல் ஆய்வாளா் ராக்கி குமாரி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். காணாமல் போன அபிநயா, அவரது 2 வயது குழந்தையை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் ஆா்.கே.பேட்டை- திருத்தணி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.