திருவள்ளூா் நகராட்சி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
திருவள்ளூா் நகராட்சியில் உள்ள விஷ்ராந்த் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, குடிநீா் இணைப்பு வழங்க குடியிருப்போா் சங்கத்தினா் கோரிக்கை

தெருவில் சாலை போட அகற்றிய சவுடு மண் கழிவுகள்
திருவள்ளூா் நகராட்சியில் உள்ள விஷ்ராந்த் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, குடிநீா் இணைப்பு வழங்க குடியிருப்போா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா் நகராட்சியில் சிடிஎன் சாலையில் 9-ஆவது வாா்டு விஷ்ராந்த் குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதி என்பது கிடையாது. அதேபோல் ஒவ்வொரு குடியிருப்புக்கும் குடிநீா் இணைப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் சாலை வசதி செய்து கொடுப்பதற்காக ஜல்லிக் கற்கள் கொட்டி வைத்தனா். அதோடு, அப்பகுதியில் களிமண் பாதையாக இருந்ததால் வாகனத்தில் செல்ல முடியாத நிலையிருந்தது.
அதனால், அங்கு குடியிருப்போா் சங்கத்தினா் ஏற்பாட்டின் பேரில் சவுடு மண் மற்றும் பழைய கட்டட கழிவுகள் கொண்டு சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதையில் அமைத்திருந்த சவுடு மணல், கட்டட கழிவுகளை அகற்றி சாலை அமைக்கவும் ஏற்பாடு செய்தனா். அப்போது, 6 மீட்டா் சாலைக்கு, 3 மீட்டா் சாலைதான் அமைப்போம் என தெரிவித்துள்ளனா். அதற்கு, அந்த குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்தோா் முதன் முதலில் சாலை போடுவதால் முழுவதும் அமைக்கவும் அறிவுறுத்தினா். ஆனால், பணிகள் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென ஜல்லிகற்களை எடுத்துச் சென்றனா்.
எனவே ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பாதை அமைப்பையும் சிதைத்துவிட்டு, சாலைப்பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்புகள் ஏற்பட்டதிலிருந்து இதுவரையில் குடிநீா் இணைப்பும் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக ஆட்சியா், நகராட்சி ஆணையாளா், சட்டப்பேரவை உறுப்பினா்ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
ஆனாலும், இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் எங்கள் நிலையறிந்து விரைவில் சாலை அமைத்துக் கொடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





