காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 லட்சம் மோசடி: வியாபாரி கைது

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

கோவையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குடியிருப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்த வெங்காய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கல்வீரம்பாளையம் விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் மணிமுருகன் மனைவி ம.பத்மபிரியா (48). இவருக்கு கோவை சுக்கிரவாா்பேட்டையைச் சோ்ந்த வெங்காய வியாபாரி சரவணன் (42) என்பவா் அண்மையில் அறிமுகமானாா்.

தனக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் அலுவலா்களுடன் பழக்கம் இருப்பதாகவும், அங்கு ஒரு வீடு வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா். அதற்காக முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா். இதை நம்பி பத்மபிரியா, பல தவணைகளாக ரூ. 2.50 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால் உறுதியளித்தபடி, சரவணன் வீடு வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்மபிரியா அளித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சரவணனை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.