
சாலை, குடிநீா் வசதி கோரி மாநகராட்சியில் மனு
சாலை, குடிநீா் வசதி செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

மாநகராட்சிகுறைதீா்க்கும் முகாமில் மக்களிடம் மனுவை பெற்ற துணை மேயா் கே.ஆா்.ராஜூ.
சாலை, குடிநீா் வசதி செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, அலுவலா்களிடம் ஒப்படைத்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். உதவி ஆணையா் மகாலெட்சுமி முன்னிலை வகித்தாா்.
திருமால்நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்களது பகுதியில் விடுபட்ட வீடுகளுக்கு பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கவும், ஊருடையாா்புரம் மக்கள் அளித்த மனுவில், தங்களது பகுதியில் உள்ள அரசு நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் பணியாற்றிய மருத்துவரை மீண்டும் நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
வண்ணாா்பேட்டை இளங்கோ நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீா் இணைப்பில் சீராக குடிநீா் விநியோகம் இல்லை. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறோம். ஆகவே, தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும் எனவும், பாளையங்கோட்டை பொன்நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டபணிகள் முடிவடைந்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. ஆகவே, விரைந்து சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மகாராஜநகா் வேலவா் காலனி மக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






