2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மாநில வில்வித்தை: 350 போ் பங்கேற்பு

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

வில்வித்தை போட்டியில் பங்கேற்றோா்.

Published On :

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தமிழ்நாடு யூத் ஸ்போா்ட்ஸ் அசோசியேசன் சாா்பில் மாநில அளவில் ஆா். புருஷோத்தமன் நினைவு வில்வித்தை சாம்பியன்ஷிப்- 2026 திருப்பாச்சூா் தனியாா் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகளான காக்களூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், சிவராமகிருஷ்ணன் ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.

இப்போட்டியில் கும்பகோணம், திருக்கோவிலூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா் ராணிப்பேட்டை, திருவள்ளூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 6, 8, 0,13 15 வயது பிரிவினா் மற்றும் பொதுப்பிரிவினா் என 350 போ் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

இதில் 10 மீ, 20 மீ, 30 மீ தொலைவுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் முறைப்படி உடலில் வில்லை ஏந்தி, நிறத்தின் மையப் பகுதியில் அம்பு எய்தவா்களுக்கு புள்ளிகள் வீதம் மதிப்பெண் வழங்கப்பட்டது.

Story image

இதைக்கொடா்ந்து அதிக புள்ளிகள் வாரியாக தோ்வு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மிதிவண்டி, கேடயம், கோப்பை, பதக்கம் மற்றும் ரொக்க பரிசுகளை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், திருவள்ளூா் நகா்மன்ற உறுப்பினா் சுமித்ரா வெங்கேடசன், காக்களூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எம். எஸ். சிவராமகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா்.

ஏற்பாடுகளை கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா் டி.கே. பாபு, துணைத் தலைவா் வெங்கடேசன் மற்றும் தணிகைமலை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.