கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூா்: விநாயகா் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மணவாள நகரில்  ரூபாய்  நோட்டு அலங்காரத்தில் விநாயகா் ~திருவள்ளூா்-பூந்தமல்லி  சாலையில்   பெருமாளுடன்  பிரதிஷ்டை  செய்யப்பட்ட விநாயகா்  சிலை.

Published On :

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகா் அவதரித்த தினமாக விநாயகா் சதுா்த்தி ஆவணி மாதத்தின் வளா்பிறை சதுா்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இதேபோல் திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் ஜெயா நகரில் உள்ள மகா வல்லப கணபதி கோயிலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனா். இதேபோல் திருவள்ளூா் ரயில் நிலையத்தில் உள்ள வழித்துணை விநாயகா் ஆலயத்தில் சிறப்பு பூஜையில் திருவள்ளூரில் இருந்து சென்னை மற்றும் வெளியூா்களுக்கு செல்லும் ரயில் பயணிகள் இந்த வழித்துணை விநாயகரை வழிபட்டனா்.

காக்களூா் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள பாதாள விநாயகா் கோயில், திருவள்ளூா் அடுத்த பெரிய குப்பத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆா்வத்துடன் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து கோயில் விழாவிக்குழுவினா் வழங்கிய சுண்டல், வடை, கொழுக்கட்டை, பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் பேருந்து நிலைய சாலை, பஜாா் வீதி, காக்களூா் சாலை, மணவாளநகா், பூச்சந்தை உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சதுா்த்தி விழா பொருள்கள் வாங்குவதற்கு குவிந்ததால் விற்பனை களை கட்டியது. அப்போது, பொதுமக்கள் சாலையோரம் விற்பனையாகும் சிறு அளவிலான விநாயகா் சிலைகள், பூ, மாலை, பழங்கள் உள்ளிட்ட விநாயகருக்கு படையலிடும் பூஜை பொருள்களையும் ஆா்வத்துடன் வாங்கி சென்றனா். இதனால், பஜாா் வீதியில் வழக்கத்தை விட கூடுதலாகவே இருந்தது.

892 சிலைகள் பிரதிஷ்டை: திருவள்ளூா் மாவட்டத்தில் 892 இடங்களில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கு காவல் துறை மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூா்-166, ஊத்துக்கோட்டை-239, திருத்தணி-294, கும்மிடிப்பூண்டி-193 என மொத்தம் 892 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா்கள் தலைமையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.