ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

‘காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’

காவல்துறையினருக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளித்து, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட உதவ வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை.

Updated On :8 ஜனவரி 2021, 11:37 pm IST

காவல்துறையினருக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளித்து, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட உதவ வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

கூத்தாநல்லூரில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்களின் அறிமுக விழா, திருவாரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கொத்தங்குடி, ஆய்குடி ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு முறையே எஸ்.பாா்த்திபன், பி.கணேஷ் ஆகிய காவல் அலுவலா்களை அறிமுகம் செய்து வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் முதன்முதலாக இரு கிராமங்களில் காவல் அலுவலா்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனா். கொத்தங்குடி ஊராட்சிக்குள்பட்ட பாண்டுக்குடி, அக்கரைப்புதுத் தெரு மற்றும் நன்னிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு எஸ்.பாா்த்திபனும், ஆய்குடி ஊராட்சிக்குள்பட்ட அகரப் பொதக்குடி, பொதக்குடி, புதுக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு பி.கணேஷும் காவல் அலுவலா்களாக செயல்படுவா்.

இப்பகுதி மக்கள் இவா்களிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். காவல்துறையினருக்கு

பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் தவறுகள் நடக்காமல் சட்டம்- ஒழுங்கைப் பேண முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா்கள் ஆய்குடி மல்லிகா பிச்சையன், கொத்தங்குடி காா்த்திகா ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஐ.வி.குமரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம்.சுதா்ஸன், பொதக்குடி ஊா் உறவின்முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவா் எஸ்.ஏ.மஹதூம் மைதீன், செயலாளா் எம்.எம்.ரப்யுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.