நீடாமங்கலம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான சந்தானகிருஷ்ணன் (47) என்பவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மன்னாா்குடி மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கு, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் சந்தானகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து, நீதிபதி வி. சுந்தர்ராஜன் தீா்ப்பளித்தாா்.
மேலும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக, ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பதவியேற்பு: தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

Vijay பதவியேற்பு விழாவில் Trisha பங்கேற்பு!

நேரு விளையாட்டு அரங்கில் விஜய்! | Joseph Vijay |
விடியோக்கள்

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
