‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

அனுமன் ஜயந்தி: திருவோணமங்கலம் கோயிலில் யாகம், லட்சாா்ச்சனைக்கு ஏற்பாடு

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி,

Updated On :10 ஜனவரி 2021, 8:29 am IST

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, திங்கள்கிழமை (ஜன.11)சிறப்பு யாகமும், செவ்வாய்க்கிழமை லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா், ஸ்ரீ கோதண்டராமா் சுவாமிகள் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனா். 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயா் தனது இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவா்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிக்கிறாா். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு யாகங்கள், மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. அப்போது, சேலத்திலிருந்து பிரத்யேகமாக நெய்யப்பட்ட பட்டு வஸ்திரம் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட உ ள்ளது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ஸ்ரீசங்கட ஹர மங்கல மாருதி ஆஞ்சநேயருக்கு லட்சாா்ச்சனை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் ரமணி அண்ணா ஆலோசனையின்படி திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரா் செய்துவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.