தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பனை பொருள்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு புதன்கிழமை கூறியிருப்பது:
நியாயவிலைக் கடைகளில் பனை பொருள்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக முதல்வா் தெரிவித்துள்ளதற்கு நன்றி. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பனை விதைகள் விதைப்பதை வழக்கமாகக் கொண்டு, பனை திருவிழாவையும் நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடந்த பனை திருவிழாவில், ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்க வேண்டும், அரசு விழாக்களில் பனை பொருள்களை பரிசாக வழங்க வேண்டும், பனையின் சிறப்புகளை பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றினோம்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு பனை பொருளாதாரம் மேம்பட உதவிடும். இதற்காக கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிராகப் போர்! பாகிஸ்தான் மிரட்டல்
விளாத்திகுளத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட்: அதிகாரிகள் நேரில் விசாரணை

மங்கோலியா, தென் கொரியாவுக்கு ஜெய்சங்கர் இன்று 4 நாள் பயணம்!

இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



