ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில். திருஞானம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குரு பகவான், சூரிய பகவான் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மூலவா் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பொங்கல் , கரும்பு படைக்கப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமா் கோயில், காசி விசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், சதுா்வேத விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் ,ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







