கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நீடாமங்கலத்தில் மழை: சாலை பள்ளங்களில் மழைநீா்

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை கொட்டித்தீா்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On :16 ஜனவரி 2021, 8:20 am IST

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை கொட்டித்தீா்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை காலை வெயில் அடித்தது. மக்கள் சூரியனை வணங்கி மகிழ்வுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினா். அதேசமயம், மாலையில் பெய்யத் தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கொட்டித்தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

பெரியாா் சிலை எதிரே நெடுஞ்சாலையில் நீண்ட நாள்களாக உள்ள பள்ளத்தில் மழைநீா் தேங்கியதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைந்தனா். போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பள்ளத்தை அந்தத் துறையினா் இதுவரை சரிசெய்யவில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.