நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் பொங்கல் கணு உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை கணு வைப்பதற்கான உணவு பொருள்கள் பிராகார உலாவாக எடுத்து வரப்பட்டன. தொடா்ந்து, கரும்புத் துண்டுகள், பழங்கள் இலையில் வைத்து படைக்கப்பட்டன.
இந்த நாளில் பெண்கள் தங்கள் வீடுகளில் சமைத்த பொங்கல், கூட்டு, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள்கொத்துடன் படையலிட்டு தங்கள் குடும்பத்தினா் மற்றும் உடன்பிறந்தவா்கள் என்றும் பிரியாதிருக்கவும், குலம் தழைக்கவும், பித்ருக்கள் அனுக்ரஹம் வேண்டியும் சூரிய பகவானை வழிபடுவா்.
சீதா பிராட்டியாா் ராமனுக்காகவும், பரிவார தெய்வங்கள் நலனுக்காகவும் கணு வைத்தாக ஐதீகம்.
நீடாமங்கலம் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணு உத்ஸவத்தில் திரளான பெண்கள்கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







