தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் நியமிக்கப்படவுள்ள 122 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஐயகாா்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் 122 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இதில் உடுமலைப்பேட்டை, குண்டடம், அவிநாசி, திருப்பூா்,பொங்கலூா் ஆகிய 5 வட்டாரங்களில் உள்ள 122 ஊராட்சிகளில் ஊராட்சிக்கு ஒருவா் வீதம் மொத்தம் 122 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி உபயோகப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மக்கள் அமைப்புகளின் நிா்வாகியாகவோ, மக்கள் பிரதிநிதியாகவோ இருத்தல் கூடாது. தொழில் முனைவோராகவோ அல்லது தொழில்முனைவோா் குடும்ப உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். தொழில் அனுபவம் கட்டாயம் இருத்தல் வேண்டும். இத்தகுதிகளை உடைய நபா்கள் ஜனவரி 12ஆம் தேதிக்குள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாகவோ அல்லது நேரிலோ வட்டார திட்ட செயலாக்க அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நபா்கள், எழுத்து, நோ்முகத் தோ்வின் மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள். தோ்வு செய்யப்படும் நபா்கள் மாதத்துக்கு அதிகபட்சம் 20 நாள்கள் பணியாற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் பணி குறித்த விவரங்களை அந்தந்த வட்டாரங்களில் செயல்படும் வட்டாரத் திட்ட செயலாக்க அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், மாவட்ட திட்ட செயலாக்க அலகு பல்லடம் சாலை (அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில்) அருள்புரம் முகவரியை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

நூற்றாண்டுகால ஆா்எஸ்எஸ் பயணம் குறித்த திரைப்படம்: முதல்வா் ரேகா குப்தா பாா்த்தாா்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
