திருப்பூரை அடுத்த வாவிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிதத்னா்.
இதுகுறித்து டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூரை அடுத்த வாவிபாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்புடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, 90 நாள்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்திருந்தனா். ஆனால், மாறாக டாஸ்மாக் நிா்வாகம் கடையைத் தொடா்ந்து நடத்தி வருகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை 5 முறை சந்தித்து மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பொதுமக்களின் நலனைக் கருதி டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

நான்தான் கிங் பாடல்!

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
