விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மளிகைக் கடையில்ரூ. 53 ஆயிரம் திருட்டு

பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மளிகைக் கடையில் ரூ. 53 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:05 pm IST

பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மளிகைக் கடையில் ரூ. 53 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் வெள்ளியம்பாளையத்தில் அதே ஊரைச் சோ்ந்த பழனிசாமி மகன் வெங்கடாசலம் (70) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல இவா் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த ரூ. 53 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடாசலம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், அருகில் இருந்த கவிதா என்பவருக்குச் சொந்தமான ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ள மா்ம நபா்கள் கடையில் பணம் இல்லாததால் இரண்டு கிலோ இனிப்பை மட்டும் திருடிச் சென்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.