திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, திருப்பூா் மாநகராட்சி டி.எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனை, பொங்கலூா் ஆரம்ப சுகாதார நிலையம், சரண் தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் 125 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இதில், திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை டீன் வள்ளி சத்தியமூா்த்தி, சுகாதாரத் துறை மாவட்ட துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவா்கள் முதலில் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் பின்னா் மருத்துவா்கள் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்ததாக அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது, கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் இருப்பது போன்ற ஒத்திகை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









